வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இருந்து கஞ்சாவுடன் பயணித்த இருவரை நேற்று (25.09.2024) இயக்கச்சி ஆனையிறவில் வைத்து இராணுவத்தின் உதவியுடன் பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உடுத்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4.500 கிலோகிராம் கஞ்சாவுடன் கொடுக்குளாய் சுனாமி வெளியேற்ற பாதையூடாக மோட்டார் சைக்கிளில் இரகசியமான முறையில் பயணித்த இருவரையே பொலிஸார் கைது செய்தனர்.