கிழக்கு மாகாண ஆளுனர் கடமைகளை பொறுப்பேற்றார்.

0

கிழக்கு மாகாண ஆளுனராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் (Trincomalee) உள்ள ஆளுனர் செயலகத்தில் இன்று (26) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், கிழக்கு மாகாணத்தில் என்ன பிரச்சனை உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். 30 வருடம் போராட்டம் நடைபெற்றது. இனிமேல் அந்த நிலைமை வரக்கூடாது.

தேசிய ஒற்றுமை இருந்தால் இந்தப்பகுதி, எமது நாடு என்பன செழித்தோங்கும்.

எனவே எமது செயற்பாட்டிற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என இன்றையதினம் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்ற முன்னாள் துணைவேந்தர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.

அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழில் மேற்படி விடயங்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.