ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநராக இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களை கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதி எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்வதற்குரிய ஒருவர் என்பதை தெரிவிப்பதோடு இவர் ஜனாதிபதியானதால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.