கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்

0

அடுத்த இரு வாரங்களுக்குள் கோழி இறைச்சியின் விலை குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அகில  இலங்கை சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களில் விலை குறையலாம் எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 1,000 முதல் 1,100 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்தார்.

அடுத்த பதினைந்து நாட்களில் இந்த விலை 900 முதல் 850 ரூபாய் வரை குறையலாம் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை முட்டையின் விலையும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் 20 ரூபா வரையிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.