கிரேக்க முறிகள் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவரை அடுத்த மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று உத்தரவிட்டார்.
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த போது கிரேக்க அரசாங்கத்தினால் வௌியிடப்பட்ட திறைசேரி பத்திரங்களை கொள்வனவு செய்தமையின் ஊடாக அரசாங்கத்திற்கு 184 கோடி ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர் இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டதுடன், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் குற்றப்பத்திரிகையில் கையெழுத்திடப்பட்ட தினம் தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த தொழினுட்ப கோளாறு காரணமாக பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டனர்.
தொழினுட்ப கோளாறை நிவர்த்தி செய்து ஆணைக்குழுவினால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.