உள்ளூர் சீனி ஆலைகளில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்துமாறு தொழிற்சாலை நிர்வாகம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலாபத்தில் இயங்கி வந்த 4 உள்ளூர் சீனி ஆலைகள் கடும் நிதி நெருக்கடியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சாலை நிர்வாகம் கூறியுள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனிக்கு வெட் மற்றும் சமூகப் பாதுகாப்பு வரிகளில் இருந்து அரசாங்கம் விலக்கு அளித்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனிக்கு மாத்திரம் அந்த வரிகளை விதித்ததே இதற்கு முக்கியக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலைமை காரணமாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி கிலோ ஒன்றின் விலை 325 முதல் 350 ரூபா வரையிலும், இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி கிலோ ஒன்றின் விலை 225 முதல் 250 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளது.