அரசியலமைப்பின் 44 ஆவது சரத்தின் உப சரத்து (1) இன் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது..
குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (28.9.2024) ஜனாதிபதி அநுரகுமாரவினால் (Anura Kumara) வெளியிடப்பட்டுள்ளது.
இதில் அமைச்சர்களின் பொறுப்பில் உள்ள விடயதானங்கள், செயல்பாடுகள், திணைக்களங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு உத்தரவிட்டு நேற்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வர்த்தமானி அறிவித்தலில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பொது ஒழுங்கைப் பேண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.