எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடுவதற்கு கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற பங்காளிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அழைப்பை ஏற்று பங்காளிக் கட்சிகள் இணையாவிட்டால் தமிழரசுக் கட்சியாக தனித்துப் போட்டியிடும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, வடக்கு கிழக்கு தவிர தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் போட்டியிட பரிசீலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.