நியூயோர்க் நாராயண் கோவில் விஷமிகளால் சேதம்

0

நியூயோர்க் சுவாமி நாராயண் கோவிலை விஷமிகள் சேதப்படுத்தி 10 நாட்கள் ஆன நிலையில், கலிபோர்னியாவில் உள்ள சுவாமி நாராயண் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்த விஷமிகள், ‘இந்துக்களே திரும்பி போங்கள்’ என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பி.ஏ.பி.எஸ். எனப்படும் ‘போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம்’ என்ற அமைப்பு கட்டியுள்ள சுவாமி நாராயண் கோவில் மெல்வெல்லியில் உள்ளது. கடந்த 17ஆம் திகதி இக்கோவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள பி.ஏ.பி.எஸ்., சுவாமி நாராயண் கோவிலுக்குள் நேற்று முன்தினம் (25) இரவு அத்துமீறி நுழைந்த விஷமிகள், ‘இந்துக்களே திரும்பி போங்கள்” என்ற வாசகத்தை எழுதி வைத்ததுடன், அங்கிருந்த குடிநீர் குழாயையும் சேதப்படுத்தி உள்ளனர்.

இதற்கு பி.ஏ.பி.எஸ்., அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. வெறுப்புக்கு எதிராக, ஒற்றுமையாக இருந்து அமைதிக்காக பிரார்த்தனை செய்வதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.