2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலனை செய்ய உள்ளதாக தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலனை செய்ய உள்ளது.