தமிழக நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு தமிழ்நாட்டின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான வயிற்று வலி காரணமாக அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் 73 வயதான அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ செயல்முறைக்காக இருதய மருத்துவர் ஒருவரின் பராமரிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.