ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்தில் வடக்கு மாகாணத்தில் மதுபானசாலைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை மீளாய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சமூகத்தின், குறிப்பாக இளைஞர்களின் நல்வாழ்வை பாதுகாக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, பரந்தன் சந்தியில் இருந்து இரணைமடு சந்தி வரையான பாதையில் அண்மைய வருடங்களில் பல மதுபானசாலைகள் குறிப்பிடத்தக்க அளவில் அமைக்கப்பட்டுள்ளதாக கீதாநாத் குறிப்பிட்டுள்ளார்
கடந்த ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்தில், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெறுவதற்காக இந்த மதுபான அனுமதிப்பத்திரங்கள் பல வழங்கப்பட்டன என்பதை, ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்