மன்னாரில் மூடப்பட்டது மதுபானசாலை!

0

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக உடனடியாக தற்காலிகமாக மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் எழுத்தில் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலை தொடர்பில் நேற்று (30) ஒன்றுகூடிய மக்கள் பிரேதப் பெட்டி சகிதம் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், போராட்டமானது புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.

இந்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் மக்களின் குடியேற்றம், இளைஞர் பயிற்சி நிலையம், ஆடை உற்பத்தி நிலையம், பள்ளிவாசல் ஆகியவை காணப்படுகின்றன.

இந்நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி இங்கு மது விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்று மக்கள் குற்றம் சுமத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.