இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடா?
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், திட்டமிட்டு எரிபொருளுக்கு தேவையான அனைத்து கட்டளைகளையும் வழங்கியுள்ளது. எனவே எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், போதுமான எரிபொருள் இருப்புக்களை பராமரிப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் வாரந்தோறும் திட்டமிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.