EPDP ஒன்பது மாவட்டங்களில் போட்டியிடும் – டக்ளஸ் தேவானந்தா

0

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி ஒன்பது மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட கட்சி ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி, கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற பின்பு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் கொழும்பு உள்ளடங்களாக ஒன்பது மாவட்டங்களில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் 1990ம் ஆண்டுகளிலிருந்து Epdp தான் மக்கள் மக்கள் தான் Edpd எனவும் சுயலாப அரசியலுக்காக ஸ்ரான்ட் இல்லாத மோட்டார் சைக்கிள் போல் தேர்தலில் கூட்டு சேரமாட்டோம் எனவும் தேர்தல் முடிந்த பின்பு Epdpயின் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கை பற்றி சிந்திப்போம்” என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.