பெரும்போகத்திற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நீரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
கன்னொருவையில் அமைந்துள்ள விவசாய திணைக்கத்தில் நேற்று இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடலொன்று நடைபெற்றதாக அதன் செயலாளர் எம்.பி.எம் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் மகாவலி அதிகாரசபை, விவசாய திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்குபற்றின.