ஐக்கிய மக்கள் சக்தியுடனான கூட்டணி என்ற பொதுவான தீர்மானத்திற்கு பாதிப்பு ஏற்படாது என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் நேற்று (01.10.2024) இரவு இடம்பெற்ற கட்சி கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“புத்தளம் மாவட்டம் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்த ஒரு கலந்துரையாடலை நாங்கள் நடாத்தி இருக்கிறோம். இதில் இன்று சில விவகாரங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.