வங்கிகளில் மோசடி! வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துதல்.

0

வங்கி மோசடி நடவடிக்கைகள் குறித்து தமது வாடிக்கையாளர்களுக்கு சம்பத் வங்கி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பத் வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,”வங்கி மோசடி நடவடிக்கைகள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதை நாங்கள் அவதானிக்கும்போது, பின்வருவனவற்றை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

உங்கள் தனிப்பட்ட தகவலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். தயவு செய்து உங்கள் கடவுச் சொற்கள், PIN இலக்கங்கள், OTP இலக்கங்கள் போன்ற இரகசிய தகவல்களை எந்த சூழ்நிலையிலும் மூன்றாம் தரப்பினருடன் பகிர்வதை தவிர்க்கவும்.

Leave A Reply

Your email address will not be published.