ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை காணாமல்ல போனமை கவலை தருகிறது – நாமல்

0

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் (PCoI) அறிக்கை காணாமல் போனது குறித்து விசாரணை நடத்துமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்தாக்குதல்கள் தொடர்பாக இங்கிலாந்தின் சனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த அறிக்கையைக் காணவில்லை என கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ அறிவித்துள்ளதையடுத்து நாமல் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் விசாரணை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளது என்பதைப் அறிவது கவலை அளிக்கிறது. அது உண்மையாக இருந்தால், அரசாங்கம் உடனடியாக அதன் இருப்பிடத்தை ஆராய்ந்து தேடி அதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என தனது X தளத்தில் நாமல் தொலைந்து போன அறிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.