வவுனியாவில் இடம்பெற்ற காணமலாக்கப்பட்ட உறவுகளுடைய போராட்டத்தில் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட வேண்டும் என அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த அமைப்பு இன்று (03.10.2024) வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
அதில் மேலும்,
இப்படியான காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகள், நியாயமான காரணங்களுக்காக ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை நடாத்தும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது ஏவி விடப்படுகின்றது.
தமிழ் மக்களை மிரட்ட முனையும் இலங்கையின் தேசியப் புலனாய்வளர்களின் இவ்வாறான நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
இவ்வாறான அடக்குமுறைகளை ‘அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு’ வன்மையாக கண்டிக்கின்றது.