39 நாடுகளுக்கான சுற்றுலா விசா கட்டணத்தை இரத்துச் செய்வதற்கான அமைச்சரவை தீர்மானம் கூடிய விரைவில் மீண்டும் அமுல்படுத்தப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் அமைச்சரவை தீர்மானம் தொடர்பான வர்த்தமானியை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தின் அனுமதியின்றி மீள அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.