பிற்போடப்பட்ட 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் விரைவில் நடத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பொதுத் தேர்தல்கள் நிறைவடைந்த பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மற்றும் நிதி விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னரே தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக முக்கிய பங்குதாரர்களுடன் ஆரம்பக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
“நாங்கள் தேவையான அடிப்படை வேலைகளை முடித்துவிட்டோம், பொதுத் தேர்தலுக்குப் பிறகு உடனடியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவோம்” என்று ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியது.