வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழர் சமவுரிமை இயக்கம்
வவுனியா
நாடாளுமன்ற தேர்தல் 2024ல் வன்னி தேர்தல் தொகுதியில் சுயாதீனமாக போட்டியிடுவதற்கான கட்டுபணத்தை தமிழர் சமவுரிமை இயக்கம் இன்றைய தினம் (03) வவுனியா தேர்தல்கள் ஆனைக்குழுவில் செலுத்தியிருந்தனர்
Related Posts
அக்கட்சியின் முதன்மை வேட்பாளர் க.யசோதினியால் குறித்த கட்டுபணம் செலுத்தப்பட்டிருந்தது பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த முதன்மை வேட்பாளர்,
தமிழர் சமவுரிமை இயக்கத்தில் பெண்கள் ஐம்பது வீதம் உள்வாங்கப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கில் ஒரு மாற்றத்துடன் கூடிய சுமூகமான சூழ்நிலையினை உருவாக்க வேண்டும் என்ற தூய மாற்றத்துடன் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
வடக்கு கிழக்கு முழுவதும் நாங்கள் போட்டியிடுகின்றோம். எனவே எமக்கான ஆதரவினை தருவீர்கள் ஏன.நம்புகின்றேன் என தெரிவித்தார்.