வேறுபாடுகள் அடிப்படையில் மக்கள் இனி வாக்களிக்கத் தயாராக இல்லை

0

மதம், இனம் அல்லது குல அடிப்படையில் மக்கள் இனி வாக்களிக்கத் தயாராக இல்லை என்பதை அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தியதாக பௌத்த விவகாரங்களின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் கலாநிதி சஸ்திரபதி கலகம தம்மரன்சி நாயக்க தேரர் தெரிவித்தார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் நிலவும் இனவாதம், மத பிளவுகள், தொடர்ச்சியான இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார்.

“தற்போது, ​​நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் மோசமடைந்து வருகின்றன. எனவே, மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை முயற்சியின் ஒரு பகுதியாக மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு சங்கம் முடிவு செய்துள்ளது,” என்று தேரர் கூறினார்.

“எந்த மதத்தையும் நம்பாத, கோவில்கள், தேவாலயங்கள் அல்லது மசூதிகளுக்குச் செல்லாத ஒரு குழுவினரே நாட்டில் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்காக நின்றார்கள். அவர்களின் தவறான கருத்துக்களால் உண்மையான நம்பிக்கையுடையவர்கள் பாதிக்கப்படுகின்றனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.