NPP தலைவர்கள் எனது குடியுரிமையை மீட்டெடுப்பதற்கான கோரிக்கைக்கு செவிசாய்த்தனர்

0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உரிய ஆவணங்களுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தினால் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது குடியுரிமைகள் விரைவில் மீள வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த ராமநாயக்க, நேற்று சில ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். “நான் தேசிய மக்கள் சக்தி தலைவர்களை அணுகினேன், அவர்கள் எனது குடியுரிமைகளை மீட்டெடுப்பதற்கான எனது கோரிக்கைக்கு செவிசாய்த்தனர். நான் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் தொலைபேசியிலும் பேசினேன்” என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“நான் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டு வாக்களிக்கும் உரிமையை இழந்தேன். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க எனக்கு ஒரு வாக்குச் சீட்டு கிடைத்தது. இருப்பினும், நான் வெளிநாட்டில் இருந்ததால் என்னால் வாக்களிக்க முடியவில்லை, ”என்று அவர் மேலும் கூறினார்.

அவரது குடியுரிமைகள் மீட்டெடுக்கப்பட்டால், பொதுத் தேர்தலில் NPP யில் போட்டியிடுவீர்களா என்று வினவிய போது, அது பற்றி தற்போதே கருத்து தெரிவிக்க முடியாது என ராமநாயக்க கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.