கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இடைநிறுத்தப்பட்ட நிவாரணத் திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் ஓய்வூதியத் தொகை அதிகரிப்பு, முதியோர் நலனோம்புகைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த முயன்ற போதும், தேர்தல் ஆணைக்குழு அதற்கான அனுமதியை வழங்கவில்லை.