ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதிக்கும் ஜனாதிபதியின் செயலாளர் இடையே சந்திப்பு

0

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடாவிற்கும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்குள் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்தும் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு வேலைத்திட்டம் தொடர்பிலும் தீர்க்கமாக கலந்தாலோசிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.