டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு மீண்டும் நவம்பரில்

0

இலங்கையில் போலி ஆவணத்தை சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்வரும்  நவம்பர் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் சாட்சி பட்டியலில் மேலும் ஒரு சாட்சியை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே உரிய சாட்சிகள் பட்டியலில் திருத்தம் செய்ய அனுமதி அனுமதி வழங்குமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.