எதிர்வரும் பொதுத் தேர்தலில் தம்மை வேட்பாளர்களாக முன்னிறுத்துமாறு தேசிய மக்கள் சக்தி கட்சியிடம் அதிகளவானர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அக்கட்சியின் தலைவர்கள் வேட்புமனு தயாரிப்பதில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொது தேர்தலுக்கான வேட்புமனு தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதிக கோரிக்கை தேசிய மக்கள் சக்தி கட்சிக்கே உள்ளதாக கூறப்படுகின்றது.
தங்கள் கோரிக்கைகளை ஏற்குமாறு பெருந்தொகை விண்ணப்பங்கள் வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.