நடிகை சோனா ஏராளமான படங்களில் கவர்ச்சி மற்றும் காமெடி கலந்த ரோல்களில் நடித்து பிரபலம் ஆனவர்.
அவர் சென்னை மதுரவாயல் பகுதியில் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார்.
கத்தியை காட்டிய திருடன்கள்
சோனாவின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் ஏசியை திருட முயற்சித்து இருக்கின்றனர். நாய் குரைப்பதை கேட்டு சோனா அங்கு சென்று பார்த்திருக்கிறார்.
அப்போது அந்த இரண்டு திருடன்களும் கத்தியை காட்டி சோனாவை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று இருக்கின்றனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த திருடன்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.