நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், அதற்கு முறையான திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவது புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya ) தெரிவித்துள்ளார்.
அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்திப் பிரிவின் கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.