மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்த்து தென் ஆபிரிக்க அணி விளையாடி வருகின்ற்து. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்க அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் துப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 118 ஓட்டங்களை பெற்றது. இதில் அதிகபட்சமாக ஸ்தபாணி டெயிலர் 2 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 41 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்றார். தென் ஆபிரிக்க அணி சார்பில் பந்து வீசிய Nonkululeko Mlaba என்பவர் 4 ஓவர்கள் பந்துவீசி 29 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி சற்று முன் வரை 17.5 ஓவர்கள் நிறைவில் விக்கட் இழப்பின்றி 119 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது. இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான Laura Wolvaardt மற்றும் Tazmin Brits ஆகியோர் முறையே 59 மற்றும் 57 ஓட்டங்களை பெற்றனர்.
அடுத்து இந்திய மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான போட்டி இலங்கை நேரப்படி மாலை 7.30 மணிக்கு டுபாயில் இடம்பெற இருக்கின்றது.