ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதுடன், நாட்டில் மீண்டும் இவ்வாறானதொரு அவலம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருடன் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இன்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.