போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஏனைய குற்றங்களுக்காக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தான் தேசிய கைதிகள் ஞாயிற்றுக்கிழமை (06) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் விமான நிலைய பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார்.
இந்தக் குழுவில் 51 பேர் ஆண் கைதிகள், மீதமுள்ள 05 பேர் பெண் கைதிகளளும் உள்ளடங்குகின்றனர்.
பல வருடங்களின் பின்னர் அமுல்படுத்தப்படும் இந்த கைதிகள் பரிமாற்ற வேலைத்திட்டத்திற்கு குறித்த கைதிகளை அழைத்துச் செல்வதற்காக பாகிஸ்தானில் இருந்து விசேட விமானம் ஞாயிற்றுக்கிழமை (06) பிற்பகல் 03.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தேசிய சிறை அதிகாரிகள் இருப்பதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்த பாகிஸ்தான் கைதிகள், கொழும்பு, வெலிக்கடை உட்பட இலங்கை முழுவதும் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு, பாகிஸ்தான் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை, விமானத்தில் ஏற்றிச் செல்லும் வரை, இந்த கைதிகளின் கைகளில் கைவிலங்கு போடப்பட்டிருந்தது துறைமுகத்தின் கூறினார்.
இவர்களை ஏற்றிச் செல்லும் பாகிஸ்தான் விசேட விமானம் 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லவுள்ளது.