பிக் பாஸ் வீட்டிற்குள் தளபதி விஜய்?

0

இன்று பிக் பாஸ் ஆரம்பம் …

இன்று மிகப்பிரமாண்டமான முறையில் பிக் பாஸ் சீசன் 8 ஆனது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என கமல் ஹாசனுக்கு பதிலாக நிகழ்ச்சித்தொகுப்பாளராக விஜய் சேதுபதியின் களமிறங்கியுள்ளார்.

விஜய் சேதுபதி எந்த அளவிற்கு பார்வையாளர்களை கவருவார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த பிக் பாஸ் சீசன் 8 துவங்குவதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில், ஒரு முன்னோட்டோம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னோட்டத்தில் முன்னைய பிக் பாஸ் போட்டியாளர்கள் சிலர் கலந்து கொண்டதாக தெரிய வருகின்றது. இதைவிட சுவாரஷ்யமான விடயம் என்னவெனில் பிக் பாஸ் ரசிகர்களும் இந்த முன்னோட்டத்தில் கலந்துகொண்டு தங்களது விருப்பங்களையும் தெரிவித்து, கேள்விகளையும் கேட்டுள்ளனர்.

இதில் பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த நபர் சென்ற நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்புவது யாரை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரசிகர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘தளபதி விஜய் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் நன்றாக இருக்கும்’ என கூறியுள்ளார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.