பிரபல நடிகையும் மாடலுமான பியூமி ஹன்சமாலியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது.
அவருக்கு சொந்தமான சொகுசு கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக நேற்று (04) சுமார் 9 மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சொகுசு கார் வாங்குவதற்கு பியூமி ஹன்சமாலி எப்படி பணம் சம்பாதித்தார் என்பது குறித்தும், அவர் விற்பனை செய்யும் அழகுசாதன பொருட்கள் ஊடாக அதிக அளவு பணம் பெற்றது எப்படி என்பது குறித்தும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
அந்த விசாரணை தொடர்பான வாக்குமூலங்களை வழங்குவதற்காக பியூமி ஹன்சமாலி நேற்று காலை 9 மணியளவில் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவில் முன்னிலையானார்.