ஜனாதிபதித் தேர்தலின் போது எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வதே எமது தீர்மானம். பொதுத் தேர்தலின் பின்னர் அது தொடர்பான உரிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (05) முற்பகல் நாராஹேன்பிட்டியில் அமைந்திருக்கும் ராமண்ய பீடத்திற்கு சென்று இலங்கை ராமண்ய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. மகுலேவே விமலநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுகொண்டார்.