வெள்ளவத்தை, அமரபுர பீடத்தின் ஆசீரை ஜனாதிபதி பெற்றுக்கொண்டார்.

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  வெள்ளவத்தை, அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க தேரர் வண. கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டுள்ளார்.

அமரபுர பீடத்தின் செயலாளரும் இதன்போது கலந்துகொண்டார். செத் பிரித் பாராயணம் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு ஆசி வழங்கப்பட்டது.

அதனையடுத்து ஜனாதிபதி தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை எடுத்துக்கூறும் விதமாக மகா சங்கத்தினருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

Leave A Reply

Your email address will not be published.