ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
கொழும்புக்கும் லண்டனுக்கும் இடையிலான விமானப் பாதையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மாற்றம் செய்துள்ளது.
இதன்படி கொழும்பில் இருந்து லண்டனுக்கான விமானங்கள் எகிப்து வான்வெளி ஊடாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரானானது ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து ஈராக் வான்பரப்பை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த விமானத்தின் நேரம் அண்ணளவாக 30 நிமிடங்கள் அதிகரிக்கும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே எரிபொருள் பாவனையும் அதிகரிக்கும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.