ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், வன்னி தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் வவுனியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கிறிஸ்தோபர் டினேஸ் றொசின்ரன், மதுர பிரபோத் ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன், வன்னித் தேர்தல் மாவட்டத்தின் முல்லைத்தீவைப் பிரதிநிதித்துவப்படுத்தி அந்தோனிப்பிள்ளை ஜெயராஜ், வின்சன் டிபோல் அருள்நாதன், சின்னத்துரை கலாநிதி ஆகியோரும், மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஞானப்பிரகாசம் மரியசீலன், முருகேசு கதிர்காமநாதன், இந்திரகுமாரன் செல்வம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.