கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து மாணவி குதித்து தற்கொலை
கொழும்பு தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து நேற்று (07) குதித்து தற்கொலை செய்த மாணவி மன உளைச்சல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த மாணவியின் தந்தை பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கடந்த யூலை மாதம் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவன் மற்றும் மாணவியின் தோழியே இந்த பாடசாலை மாணவி எனவும், இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக உயிரிந்த மாணவியின் தந்தை பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இது தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
தாமரை கோபுரத்தின் 29ஆவது மாடியில் உள்ள கண்காணிப்பு அறையில் அவர் இருந்ததாகவும், 3ஆவது மாடியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மருதானை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் 16 -18 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ள நிலையில், அவர் வண்ணமயமான ஆடைகளை அணிந்து தாமரை கோபுரத்திற்கு தனியாக சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவியின் கைப்பை தாமரை கோபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு கையடக்க தொலைபேசியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்
முதலாம் இணைப்பு
கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து முன்னணி சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சி.சி.ரி.வி காட்சிகளின் படி, மாணவி கோபுரத்தின் 29வது மாடியில் இருந்து குதித்துள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின் படி இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்காணிப்புத் தளத்தில் இருந்து ஒரு ஜோடி காலணிகள் மற்றும் பாடசாலை பை ஒன்றும் காணப்பட்டுள்ளது. பலியானவர் 18 முதல் 20 வயதுடையவர் என நம்பப்படுகிறது