எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் விபரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
இந்தநிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் இன்றையதினம் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக சசிகலா ரவிராஜ் களமிறங்குகின்றார்.
இவர் கடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.