தமிழர்களுடைய மூச்சாக இருந்த இருந்த தமிழரசுக் கட்சி இன்று தனி நபர் ஒருவருடைய கம்பனியாக மாறிவிட்டது என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.
மேலும், தேர்தலில் தோல்வியடைந்தால் இரண்டு அணி, தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமானால் ஒரு அணி என்பதுதான் சுமந்திரனின் செயற்பாடு.
அவருக்கு என்ன தேவையோ அந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்றது போல சுமந்திரன் தன்னை மாற்றிக் கொள்வார் என்றும் சட்டத்தரணி தவராசா இதன்போது கூறினார்.
இதேவேளை, தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலுக்கு திரைமறைவில் பெரும் சதி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.