எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஊடகவியலாளர் லோஷன் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியினால் இன்று (07.10.2024) கொழும்பில் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொழும்பில் நடைபெற்ற அரகலய போராட்டத்தில் தமிழ் மக்களின் சார்பில் லோஷன் பங்களித்ததாகவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, புதிய அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.