நாமலுடன் ரோஹன விஜய வீராவின் மகன் மோதல்
ஜனதா விமுத்தி பெரமுன (ஜேவிபி) எனும் மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் புதல்வர் உவிந்து விஜேவீர எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. .
மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாம் தலைமுறை அரசியல் கட்சியின் தலைவராக உவிந்து விஜேவீர செயற்பட்டு வருகிறார்.
அவர் தற்போது குருநாகல் மாவட்டத்தில் கட்சியை முழுமையாக ஒழுங்கமைத்து வருவதால் அவர் குருநாகல் மாவட்டத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் நாமல் ராஜபக்ஷ, குருநாகல் மாவட்டத்தில் பொது தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும் அது உண்மையான தகவல் இல்லையென நாமல் தரப்பினால் நிராகரிக்கப்பட்டது.
ஆனால் அது அரசியல் தந்திரோபய ரீதியில் மறுக்கப்பட்ட தகவல் என்றும், குருணாகலிலில் நாமல் போட்டியிடுவதே திட்டம் எனவும் பெரமுன கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.