தமிழரசு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விலகுவதாக நமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ள போதிலும் அவர் கடிதம் எதனையும் எனக்கு அனுப்பி வைக்கவில்லை என கட்சியின் செயலாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா,
Related Posts
தான் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீங்கி உள்ளதாகவும் உறுப்புரிமையில் மாத்திரம் தமிழரசுக் கட்சியில் இருப்பேன் எனவும் தெரிவித்ததோடு கட்சியின் செயலாளர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வைத்திய கலாநிதி சத்தியலிங்கத்திடள் இது தொடர்பில் கேட்டபோது,
எனக்கு எவ்விதமான கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்தார்.