முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பதில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு கடமையில் தற்போதும் 163 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 50 உத்தியோகத்தர்களும் பிரமுகர்கள் பாதுகாப்பு பிரிவின் 6 உத்தியோகத்தர்களும் இடமாற்றம் வழங்கப்பட்ட சில உத்தியோகத்தர்களும் அடங்குகின்றனர் என  பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.