வன்னி தேர்தல் தொகுதியில் இரண்டு ஆசனங்களையும் யாழ் தேர்தல் தொகுதியில் மூன்று ஆசனங்களையும் கைப்பற்றுவோம் என ஈ பி டி பி சார்பில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்தார்.
இன்று வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்பு மனுவை வவுனியா தெரிவத்தாட்சி அதிகாரி அலுவலகத்தில் தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
Related Posts
ஈ பி டிபி க்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பிருக்கிறது. எமக்கு தொலைபேசியிலும் நேரிலும் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
நாம் பல அபிவிருத்தி திட்டங்களை இந்த பிரதேசங்களில் மேற்கொண்டுள்ளோம். அதன் பிரதிபலிப்பாக எமக்கு இரண்டு ஆசனங்கள் இம்முறை வன்னி தேர்தல் தொகுதியில் கிடைக்கும்.
அதேபோல் யாழ் தேர்தல் தொகுதியில் மூன்று ஆசனங்களை நாங்கள் கைப்பற்றுவோம். இதன் மூலமாக மக்களுக்கான அபிவிருத்தியை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தார்.