பாக்கிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் இரண்டாம் நாள்

0

இரண்டாம் நாள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்த பாகிஸ்தான் அணி 556 ஓட்டங்களை பெற்றது. மூன்றாவது சதமாக சல்மான் ஹஹ் 104 ஓட்டங்களை பெற்றார்.

இன்றைய நாள் முடிவில் 96 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டை இழந்திருக்கின்றது இங்கிலாந்து அணி.

 

முதலாம் இணைப்பு

பாகிஸ்தானுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி இன்று MULTUN இல் ஆரம்பித்தது. நாணய சுழட்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அப்துல்லாஹ் ஷபிக் மற்றும் சைம் அயூப் ஆகியோரில் சைம் அயூப் நான்கு ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும் அடுத்து வந்த ஷான் மசூத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இருவரும் சதம் அடித்தனர். அப்துல்லாஹ் ஷபிக் 102 ஓட்டங்களுடனும் ஷான் மசூத் 151 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்க தொடர்ந்து பார்பர் ஆசாம் ௩௦ ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். முதலாம் நாள் நிறைவில் சவுத் ஷகீல் 35 ஓட்டங்களுடனும் நசீம் ஷா ஓட்டம் எதனையும் பெறாமலும் களத்தில் நிக்கின்றனர். முதலாம் நாள் நிறைவில் பாக்கிஸ்தான் அணி 328 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்து நிற்கின்றது. நாளை இரண்டாம் நாள் ஆட்டம் தொடரும்.

இங்கிலாந்து அணி சார்பில் கஸ் அட்கின்சன் அதிக பட்சமாக இரண்டு விக்கட்டுக்களை பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.