அமெரிக்க டாலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

0

இன்றையதினம்(08.10. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஒப்பீட்டளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 298.03 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 220.17 ரூபாவாகவும், கொள்வனவு விலை 210.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 329.01 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 315.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 391.7 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 376.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.